தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டில் பேசிய அக்கட்சியின் தலைவர் விஜய் திமுகவை கடுமையாக சாடினார். திராவிட மாடல் ஆட்சி என ஏமாற்றி வருகிறார்கள் என பேசினார். இது குறித்து செய்தியாளர்கள் துணை முதல்வர் உதயநிதியிடம் இன்று (அக். 29) கேள்வி எழுப்பினார்கள். அதற்கு பதிலளித்த அவர், “இது தொடர்பாக திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி பேசிவிட்டார், நான் எதுவும் கூற விரும்பவில்லை” என்றார்.