உத்தரகாண்டின் நைனிட்டாலில் உள்ள ராம்நகர் பகுதியில் சிறுமியுடன் உடலுறவு கொண்ட 19 நபர்களுக்கு எச்ஐவி பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. ஏற்கனவே எச்ஐவி பாதிக்கப்பட்ட 17 வயது சிறுமி போதைப்பழக்கத்திற்கு அடிமையான நிலையில், அவரிடம் போதைப்பொருட்கள் தருவதாக கூறி பலரும் பாதுகாப்பற்ற உடலுறவு வைத்துள்ளனர். இதனால் கடந்த 6 மாதங்களில் மட்டும் 19 பேர் எச்ஐவியால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் சிலர் அச்சிறுமியுடன் உறவு வைத்திருந்ததால் இந்த பாதிப்பு அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.