விழுப்புரத்தில் திருட்டை தடுப்பது குறித்து கூட்டம்

65பார்த்தது
விழுப்புரத்தில் திருட்டை தடுப்பது குறித்து கூட்டம்
விழுப்புரத்தில் தொடரும் திருட்டை தடுக்கும் விதமாக, உட்கோட்ட காவல்துறை சார்பில் விழிப்புணர்வு கூட்டம் நேற்று(அக்.25) நடந்தது. இன்ஸ்பெக்டர்கள் இருதயராஜ், கல்பனா, சித்ரா, செல்வவிநாயகம், சப் இன்ஸ்பெக்டர்கள் அன்பழகன், பிரியங்கா மற்றும் வியாபாரிகள், குடியிருப்பு சங்கத்தினர் பங்கேற்றனர். ஏ. டி. எஸ். பி. , திருமால் தலைமை தாங்கி பேசுகையில், 'திருட்டை தடுக்கவும், திருட்டு நடந்தால் விரைந்து குற்றவாளிகளை கைது செய்யவும், சி. சி. டி. வி. , அவசியமாகிறது. சி. சி. டி. வி. , இருக்கும் பகுதியில் திருடர்கள் வருவதில்லை. இதனால், பொது மக்கள், வியாபாரிகள் திருட்டை தடுக்கவும், பாதுகாப்பிற்காகவும், தங்கள் பகுதிகளில் கேமராக்களை பொருத்த வேண்டும்' என்றார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி