சென்னை அண்ணாசாலையில் உள்ள பெரியார் உருவப்படத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். பெரியாரின் 51வது நினைவு நாளை, திக, திமுக, மதிமுக, அதிமுக, தேமுதிக உள்ளிட்ட கட்சியினர் அனுசரித்து வருகின்றனர். அந்த வகையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் துரைமுருகன், சேகர்பாபு, எம்.பி., ஆ.ராசா உள்ளிட்ட பலர் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.