விழுப்புரம் அருகே செல்போனில் பேசியபடியே அரசு பேருந்தை ஓட்டிய ஓட்டுநர் அண்மையில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில் அதே ஊரில் வேறு ஒரு ஓட்டுநர் செல்போனை பார்த்தபடியும், பேசியபடியும் அரசு பேருந்தை ஓட்டும் வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது. அரசு பேருந்து ஓட்டுநர்கள் பணியின்போது செல்போன் பயன்படுத்தினால் 29 நாட்களுக்கு சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள் என தமிழக அரசு நேற்று (டிச. 23) உத்தரவிட்டிருந்தது.