விழுப்புரம் - Viluppuram

ரயில் நிலையத்தில் காவல் நிலைய கட்டடம் அகற்றம்

ரயில் நிலையத்தில் காவல் நிலைய கட்டடம் அகற்றம்

விழுப்புரம் ரயில் நிலையத்தில் பழங்கால அடையாளமாக இருந்த ரயில்வே காவல் நிலைய கட்டடம் இடித்து அகற்றப்பட்டது. விழுப்புரம் ரயில் நிலையத்தில், மத்திய அரசின் அம்ரித் பாரத் திட்டத்தில், 25 கோடி ரூபாய் மதிப்பில் புனரமைப்பு பணிகள் தொடங்கி நடந்து வருகிறது. இதற்காக, ரயில் நிலையத்தின் முகப்பு பகுதி யில் உள்ள பழைய கட்டடங்கள் இடித்து அகற்றப்பட்டு, புதிய கட்டுமானப் பணிகள் நடந்து வருகிறது. அதனைத் தொடர்ந்து, ரயில் நிலைய வாயில் பகுதியில் இருந்த, மிக பழமையான ரயில்வே காவல் நிலையம், ரயில் நிலையத்தின் கடைசி பகுதியில் இருந்த காலி இடத்தில், புதிதாக கட்டப்பட்டு கடந்த மாதம் முதல் இடமாற்றம் செய்யப்பட்டது. இந்நிலையில், ரயில் நிலையத்தின் முகப்பு பகுதியில், ரயிலடி விநாயகர் கோவில் அருகே இருந்த பழமையான ரயில்வே ரயில் நிலைய கட்டடம் நேற்று ஜே. சி. பி. , மூலம் இடித்து அகற்றப்பட்டது. மேலும், வளாகத்தில் இருந்த பெரிய வேப்ப மரங்கள், தென்னை மரங்கள் போன்றவையும் வெட்டி அகற்றும் பணி நடந்தது. இந்த இடத்தில், ரயில்வே பார்சல் அலுவலகம் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. அதனால், பழைய ரயில்வே காவல் நிலைய கட்டடம் இடித்து அகற்றப்பட்டுள்ளதாக, ரயில்வே ஊழியர்கள் தெரிவித்தனர்.

வீடியோஸ்


விழுப்புரம்
வரும்முன் காப்போம் திட்ட மருத்துவ முகாம்
Jul 15, 2024, 00:07 IST/மயிலம்
மயிலம்

வரும்முன் காப்போம் திட்ட மருத்துவ முகாம்

Jul 15, 2024, 00:07 IST
மயிலம் அடுத்த முப்புளி கிராமத்தில் வரும்முன் காப்போம் பொது மருத்துவ முகாம் நடந்தது. முகாமிற்கு, மயிலம் எம். எல். ஏ. , சிவக்குமார் தலைமை தாங்கினார். மயிலம் வட்டார தலைமை மருத்துவர் தேன்மொழி முன்னிலை வகித்தார். முப்புளி அரசு மருத்துவர் ரூபி வரவேற்றார். மயிலம் வட்டார வளர்ச்சி அலுவலர் ரவி மருத்துவ முகாம் அவசியம் குறித்து சிறப்புரையாற்றினார். ஊராட்சி தலைவர் சந்திரசேகர், முன்னாள் ஊராட்சி தலைவர் கோவிந்தன் உட்பட பலர் பேசினர். முகாமில் டாக்டர்கள் பாரதிதாசன், கலையரசி, சரண்யா, பாலாஜி ஆகியோர் சிகிச்சை அளித்தனர். முகாமை வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ரமணி ஒருங்கிணைத்தார். சுகாதார ஆய்வாளர்கள் அசோகன், சுந்தர்ராஜன், கதிரவன், மோகனகிருஷ்ணன் பயனாளிகளுக்கு தேவையான உதவிகளை செய்தனர். முகாமில் ஸ்கேன், எக்ஸ்ரே, ரத்த பரிசோதனை, சித்த மருத்துவம் என அனைத்து வகையான சிகிச்சைகளும் மேற்கொள்ளப்பட்டது. , சமுதாய செவிலியர், கிராம செவிலியர்கள், அங்கன்வாடி, அலுவலக பணியாளர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.