பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில் பிரதமர் நரேந்திர மோடியுடன் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று (டிச., 24) ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். டெல்லியில் உள்ள பிரதமர் மோடியின் இல்லத்தில் இருவரும் ஆலோசனை நடத்தி வருகின்றனர். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு, அரசியல் சூழல் குறித்து இருவருவரும் ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. பல்கலைக்கழகங்களில் துணை வேந்தர் பணியிடங்களை நிரப்புவதில் ஆளுநர் முட்டுக்கட்டை போடுவதாக திமுக குற்றம்சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.