தமிழகத்தின் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் நினைவு நாள் இன்று (டிச. 24) அனுசரிக்கப்படுகிறது. அவர் குறித்த நினைவலைகளை பகிர்ந்துள்ள கமல்ஹாசன், "நான் குழந்தையாக தவழ்ந்த நேரத்தில் மடி ஒன்றைக் கொடுத்தவர்; நான் சிறுவனாக சினிமா புகுந்த காலத்தில் நட்சத்திரமாக முன்னோடியவர்; மக்கள் மனம் கவர்வதில் எனக்கு மானசீகப் பாடம் நடத்திய ஆசிரியர். மறையாத நினைவுகளை தந்தவரை இந்நாளில் வணங்குகிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.