பாலியல் வழக்கு: இளைஞருக்கு 7 ஆண்டுகள் சிறை
விக்கிரவாண்டி வட்டம், மேட்டுத்தெருவைச் சோ்ந்தவா் ஷாகுல் ஹமீது மகன் பாபு (34). இவா், விழுப்புரம் மாவட்டம், செண்டியம்பாக்கம் பகுதியைச்சோ்ந்த 20 வயது பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக பெரியதச்சூா் போலீஸாரால் கடந்த 2019-இல் கைது செய்யப்பட்டாா். இந்த வழக்கு விழுப்புரம் எஸ். சி. , எஸ். டி. , சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், திங்கள்கிழமை விசாரணை முடிவடைந்தது. இதில், குற்றஞ்சாட்டப்பட்ட பாபுவுக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 2 லட்சம் அபராதமும் விதித்து சிறப்பு நீதிமன்ற நீதிபதி பாக்கியஜோதி தீா்ப்பளித்தாா். இதையடுத்து, பாபு கடலூா் மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.