நெல்லை கூடங்குளம் அருகே மின்சாரம் பாய்ந்து தம்பி உயிரிழந்த நிலையில், காப்பாற்ற முயன்ற அண்ணன் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கூடங்குளம் பிள்ளையார் கோயில் பகுதியில் வீட்டின் அருகே அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்ததில், மின்சாரம் பாய்ந்து அன்பரசன் (33) என்பவர் உயிரிழந்தார். தம்பியைக் காப்பாற்ற முன்ற அண்ணன் முருகன் மீதும் மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டார். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.