காணை அடுத்த கப்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பச்சமுத்து மகன் நாராயணன், 30; ஆட்டோவில் காய்கறி வியாபாரம் செய்கிறார். இவர், நேற்று முன்தினம் கோனுாரில் வியாபாரம் செய்த போது, அதே கிராமத்தைச் சேர்ந்த ஏழுமலை மகன் மதியழகன், 27; குடிபோதையில் தகராறு செய்தார். இதையறிந்த நாராயணன் உறவினர் வினாயகமூர்த்தி, 31; இவரது தம்பி வீரா, 28; ஆகியோர் மதியழகனிடம் தட்டிக் கேட்டனர். ஆத்திரமடைந்த மதியழகன், சகோதரர்கள் இருவரையும் தாக்கினார். இதுகுறித்த புகாரின் பேரில், இன்று காணை போலீசார் வழக்குப் பதிந்து மதியழகனை கைது செய்தனர்.