சுதந்திரப் போராட்ட வீரர் முத்துராமலிங்கத்தேவரின் குருபூஜையை ஒட்டி 10,000 போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தென்மண்டல ஐ.ஜி. பிரேம் ஆனந்த் சின்ஹா தெரிவித்துள்ளார். ராமநாதபுரம் கமுதி அடுத்த பசும்பொன்னில் ஆய்வு செய்த அவர், அசம்பாவிதங்களை தடுத்த சிசிடிவி, ட்ரோன் மூலம் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது என்றார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் பசும்பொன் செல்கின்றனர்.