தமிழக வெற்றிக்கழக மாநாடு 27 ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்துள்ள வி. சாலை கிராமத்தில் நடைபெற உள்ளது மாநாட்டின் முக்கிய நிகழ்வாக நடிகர் விஜய் கட்சி கொடியை ஏற்ற உள்ளார். மாநாடு நடைபெறும் இடத்தின் முகப்பு பகுதியில் விழுப்புரம் தனியார் பள்ளியின் உரிமையாளருக்கு சொந்தமான இரண்டு ஏக்கர் நிலப்பரப்பில் 15 க்கு 15 என்ற அளவில் இந்த கொடி கம்பம் அமைக்கப்பட்டுள்ளது, நாளை மறுநாள் ஏற்றப்படும் இந்த கொடி நிரந்தரமாக ஐந்து ஆண்டுகள் அங்கேயே இருப்பதற்கான ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. மாநாடு தொடங்கியவுடன் நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகத்தின் கொடியை மாநாட்டு திடலில் இருந்து ரிமோட் கண்ட்ரோல் மூலம் இந்த கொடியை ஏற்றி வைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 12க்கு 12 அளவில் 7 அடி ஆழத்தில் சிமெண்ட் கான்கிரீட்டுகள் போட்டு தரை மட்டத்திலிருந்து இரண்டடி உயரத்தில் கொடிக்கம்பத்தின் பீடம் அமைக்கப்பட்டு அதிலிருந்து 100 அடி உயரம் கொண்ட இந்த கொடிமரம் அமைக்கப்படுகிறது.
100 அடி கொடிக்கம்பத்தில் கீழே இருந்து 35 அடியையும் அடுத்ததாக 33 அடி 33 அடி கொண்ட இரண்டு துண்டுகள் இணைக்கப்பட்டு 100 அடி கொடிக்கம்பம் உருவாக்கப்பட்டு வருகிறது.