விழுப்புரம் அடுத்த கோழிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் சேகர், 57; அதே கிராமத்தைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன், 40: இருவருக்கும் அருகருகே நிலம் உள்ளது. ராமச்சந்திரன் தனது நிலத்தில் வரப்ரை சீரமைத்தபோது, மண்ணை வெட்டி சேகரின் நிலத்தில் போட்டுள்ளார். இதனை சேகர் தட்டிக்கேட்டார். இதில் ஆத்திரமடைந்த ராமச்சந்திரன், மண்வெட்டியால் சேகரை தாக்கினார். இது குறித்து சேகர் கொடுத்த புகாரின்பேரில், ராமச்சந்திரன் மீது காணை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.