தங்க நகை கடன் தொடர்பான சுற்றறிக்கை செல்லாது என அறிவிக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கில், ரிசர்வ் வங்கியின் தலைமை பொது மேலாளருக்கு நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. தங்க நகை கடன் தொடர்பாக வெளியிடப்பட்ட சுற்றறிக்கையை சட்டவிரோதமானது என்று மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நகை கடன் நகர்ப்புறங்களில் கிராமுக்கு ரூ.5,000, கிராமப்புறங்களில் ரூ.7,500 வழங்கப்படும் என்பது விதிகளுக்கு எதிரானது என கூறப்பட்டுள்ளது.