அரசுப்பேருந்து ஓட்டுநர் பயணிகளின் உயிரைக் காப்பாற்றி உயிரிழந்த சோகம் நெல்லையில் நடந்துள்ளது. திருநெல்வேலி மாவட்டம் ஏர்வாடியில் அரசுப்பேருந்து ஓட்டுநர் மாரியப்பன் பேருந்தை இயக்கும்போது மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக சாலையோரம் பேருந்தை நிறுத்தி மயங்கியவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். இறக்கும் தருவாயிலும் பயணிகளின் உயிரைக்காப்பாற்றிய மாரியப்பனை எண்ணி பயணிகள் கண்ணீர்விட்டனர்.