மோகன்லால் நடிப்பில் வெளியாகியுள்ள 'எம்புரான்' படத்தில் முல்லைப் பெரியாறு வசனம் இடம்பெற்றுள்ளது குறித்து தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார். எம்புரான் பட காட்சிகளை சென்சாரில் கட் செய்யவில்லை என்றும் படம் வெளியே வந்து, எதிர்ப்பு கிளம்பிய பிறகு நீக்கப்பட்டுள்ளதாகவும் முதலமைச்சர் தெரிவித்தார். இதனிடையே படத்தை பார்க்கவில்லை என்றும் பார்த்தவர்கள் கூறியதைக் கேட்டு பயமும், கோபமும் வருவதாக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.