ஒரு சவரன் தங்கம் ரூ.70,000-ஐ விரைவில் எட்டும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,280 குறைந்து சாதாரண மக்களை திக்குமுக்காடச் செய்துள்ளது. இதற்கு, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் 60 நாடுகள் மீது ரெசிப்ரோக்கல் வரி விதித்ததுதான் காரணம் என பொருளாதார வல்லுநர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். ட்ரம்பின் அறிவிப்பைத் தொடர்ந்து சர்வதேச வர்த்தகத்தில் பெரும் பாதிப்பு உருவாகியுள்ளது. இதன் காரணமாகவே தங்கத்தின் விலை கடும் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது.