முன்னாள் அமைச்சர் சண்முகம் மீதான அவதுாறு வழக்கு விசாரணை வரும் 5ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
விழுப்புரத்தில் கடந்தாண்டு ஜூலை 20ம் தேதி அ. தி. மு. க. , சார்பில் நடந்த ஆர்ப்பட்டதில் பேசிய முன்னாள் அமைச்சர் சண்முகம் தமிழக அரசையும், முதல்வர் குறித்து அவதுாறாக பேசியதாக, மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில், அரசு வழக்கறிஞர் சுப்ரமணியம் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. முன்னாள் அமைச்சர் சண்மும் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளித்து ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளதாக வழக்கறிஞர்கள் மனு தாக்கல் செய்தனர். அதனையேற்ற நீதிபதி பூர்ணிமா, வழக்கு விசாரணையை வரும் 5ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.