ஆந்திரா: இஸ்ரோ வடிவமைத்துள்ள பி.எஸ்.எல்.வி சி-60 ராக்கெட் டிச.30ம் தேதி விண்ணில் பாய உள்ளது. எஸ்.டி.எக்ஸ்.1, எஸ்.டி.எக்ஸ்.2 என தலா 220 கிலோ எடை கொண்ட 2 சிறிய செயற்கைக்கோள்களை சுமந்து செல்லும் இந்த ராக்கெட், ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து டிச.30ம் தேதி இரவு 9.58 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட உள்ளது. பூமியிலிருந்து 470 கி.மீ. உயரத்தில் வெவ்வேறு சுற்றுவட்டப் பாதைகளில் 2 செயற்கைகோள்களும் நிலைநிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.