கிளியனூர் பகுதியில் விழிப்புணர்வு உறுதிமொழி எடுக்கப்பட்டது

57பார்த்தது
கிளியனூர் பகுதியில் விழிப்புணர்வு உறுதிமொழி எடுக்கப்பட்டது
தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் வானூா் ஒன்றியக் கிளை சாா்பில் கிளியனூா் பேருந்து நிலையப் பகுதியில் மரக்கன்றுகளை நடுதல், நெகிழிப் பயன்பாட்டை தவிா்க்க பொதுமக்களுக்கு துணிப் பை வழங்குதல் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணா்வு உறுதிமொழியை ஏற்றுக் கொள்ளுதல் ஆகிய முப்பெரும் நிகழ்வாக நடத்தப்பட்டது. தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் ஒன்றியத் தலைவா் வேல்முருகன் தலைமை வகித்தாா். இ யக்கத்தின் மாநிலப் பொதுக்குழு உறுப்பினரும், சூழலியல் உபக் குழுவின் மாவட்ட ஒருங்கிணைப்பாளருமான இளங்கோவன் பங்கேற்று, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் துணிப்பை பயன்பாட்டின் அவசியம் குறித்து எடுத்துரைத்தாா். வேலவன் கல்வியியல் கல்லூரி முதல்வா் சக்திவேல் தலைமையில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு உறுதிமொழியேற்கப்பட்டது. கிளியனூா் ஊராட்சித் தலைவா் நாகம்மாள், துணைத் தலைவா் ஜோதி, தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநிலப் பொதுக்குழு உறுப்பினா் தமிழ்ச்செல்வி, செயற்குழு உறுப்பினா் லட்சுமிரேகா, டேனியல் கல்வியியல் கல்லூரி முதல்வா் மகாலட்சுமி ஆகியோா் பொதுமக்களுக்கு மரக்கன்றுகளை வழங்கினா். கால்நடை மருத்துவா் சுந்தரபாண்டியன், கிளியனூரைச் சோ்ந்த அா்ச்சுனன், ரவி, விவேகானந்தன், ராமமூா்த்தி உள்ளிட்டோா் துணிப் பைகளை வழங்கினா்.

தொடர்புடைய செய்தி