அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஆய்வு செய்த டிஐஜி
திருக்கோவிலுார் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் டி. ஐ. ஜி. , திஷா மிட்டல் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, போக்சோ மற்றும் வரதட்சணை குறித்து பதிவு செய்ய வேண்டிய வழக்குகள், அதில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள், பாதிக்கப்பட்டவர்களுக்கான உரிமைகள், வழக்கை விரைந்து முடிக்க வேண்டியதன் அவசியம் குறித்து விளக்கினார். உடன் திருக்கோவிலூர் டிஎஸ்பி பார்த்திபன் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் சுமதி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.