திருக்கோவிலூர்: அணைக்கட்டில் குவிந்த பொதுமக்கள்
திருக்கோவிலுார் அணைக்கட்டில் ஆபத்தை உணராமல் குளித்து மகிழ்ந்த மக்கள் உற்சாகமாக தீபாவளியை கொண்டாடினர். சாத்தனுார் இருந்து தென்பெண்ணை ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இது திருக்கோவிலூர் அணைக்கட்டில் இருந்து ராகவன் வாய்க்கால், மலட்டாறு, பம்பை வாய்க்கால்களில் திருப்பி விடப்படுகிறது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சீரான நீர் வரத்து காரணமாக, சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த கிராம மக்கள் சுற்றுலா தளம் போல் அணைக்கட்டில் குவிந்து, ஆற்றில் குளித்து மகிழ்ந்தனர். அணைக்கட்டின் வாய்க்கால் மதகு பகுதியில் குளிப்பது ஆபத்து என பொதுப்பணித்துறை அதிகாரிகளும், போலீசாரும் எச்சரித்தனர். இதனால் சீரான நீர்வரத்து உள்ள ஆற்றின் மையப் பகுதியில் குளித்தனர்.