திண்டிவணத்தில் அதிமுகவினர் சாலை மறியல்
அதிமுக முன்னாள் அமைச்சர் சண்முகம் அளித்த புகார்களின் மீது நடவடிக்கை எடுக்காத போலீசை கண்டித்து நேற்று(அக்.25) விழுப்புரத்தில் கலெக்டர் அலுவலகம் முன் தர்ணாவில் ஈடுபட்டதால் போலீசார் அவரை கைது செய்தனர். இதனை கண்டித்து மதியம் 1: 30 மணிளவில் திண்டிவனம் நகர செயலாளர் தீனதயாளன் தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடந்தது. மாவட்ட பொருளாளர் வெங்கடேசன், ஜெ. , பேரவை நிர்வாகிகள் ரூபன்ராஜ், வடபழனி, மாநில எம். ஜி. ஆர். மன்ற துணைத் தலைவர் ஏழுமலை, முன்னாள் நகர கூட்டுறவு வங்கி தலைவர் சக்கரவர்த்தி உட்பட பலர் பங்கேற்றனர். போலீசார் பேச்சுவார்த்தைக்குப் பின் 1: 50 மணியளவில் மறியல் கைவிடப்பட்டது.