திண்டிவனம் மரக்காணம் ரோடு, இந்திரா நகரில் வசிப்பவர் நாராயணன் மனைவி சுகன்யா, 24. இவர் ராணிப்பேட்டையில் இருந்தபோது, அங்குள்ள சிப்காட், அண்ணா நகரில் வசிக்கும் விஜய், 31; என்பவரிடம் கடன் வாங்கியுள்ளார். பணத்தை கேட்டு, விஜய் அடிக்கடி சுகன்யாவை மிரட்டி வந்தார். நேற்று முன்தினம் இரவு 10: 30 மணியளவில், சுகன்யா வீட்டிற்கு விஜய் மற்றும் ராணிப்பேட்டையை சேர்ந்த முகமதுரபீக், 41; ஆகியோர் சென்றனர். வீட்டிலிருந்த சுகன்யாவை தாக்கி, கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்தனர். இதுகுறித்து சுகன்யா திண்டிவனம் டவுன் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில், சப்இன்ஸ்பெக்டர் செந்தில்முருகன் வழக்குப் பதிந்து விஜய், முகமதுரபீக் ஆகியோரை கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி நேற்று சிறையில் அடைத்தார்.