விழுப்புரம்: கிணற்றில் தவறி விழுந்த விவசாயி உயிரிழப்பு

82பார்த்தது
விழுப்புரம்: கிணற்றில் தவறி விழுந்த விவசாயி உயிரிழப்பு
விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனுார் அடுத்த மானந்தல் கிராமத்தை சேர்ந்த நாராயணசாமி மகன் சங்கர், 53; விவசாயி. இவர் கடந்த 16 ம்தேதி இரவு 8. 30, மணிக்கு, நிலத்திலிருந்து வீடு திரும்பும் போது, கிராம பொது கிணற்றில் தவறி விழுந்துள்ளார். இதில் படுகாயமடைந்த அவரை மீட்டு வேலுார் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனில்லாமல் இறந்தார். இது குறித்து நேற்று அவலுார்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி