சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத் திறனாளிகள்

50பார்த்தது
சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத் திறனாளிகள்
வல்லம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள கிராமங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு மத்திய அரசின் மகாத்மா காந்தி வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் முறையாக வேலை வழங்குவதில்லை எனக் கூறி மாற்றுத்திறனாளிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். மக்கள் பாதுகாப்பு முன்னேற்ற சங்க நிறுவனத் தலைவா் எஸ். பி. பொன்னுசாமி தலைமையில் வல்லம் ஒன்றியம் திருவம்பட்டு, சொரத்தூா், மொடையூா், கம்மந்தூா் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு 100 நாள் வேலை திட்டத்தில் முறையான பணி வழங்கவில்லை எனக்கூறி வல்லம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரே சாலை மறியல் போராட்டம் நடந்தது. சாலை மறியலில் புதிய அலை மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பு நிா்வாகிகள் ராமன், ஏழுமலை, சிலம்பரசன், சுரேஷ் உள்ளிட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனா். தகவலறிந்து வந்த செஞ்சி போலீஸாா் சாலை மறியலில் ஈடுபட்டவா்களிடம் சமாதான பேச்சு நடத்தி அலுவலா்களிடம் கலந்தோசித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறி அழைத்துச் சென்றனா்.

தொடர்புடைய செய்தி