மயிலம் அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி சார்பில் நடந்த ஊர்வலத்தை மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் அருள் தலைமை தாங்கி கொடியசைத்து துவக்கி வைத்தார். வட்டாரக் கல்வி அலுவலர் மதன்குமார் முன்னிலை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியர் பாஸ்கர் வரவேற்றார். நிகழ்ச்சியில் வட்டார வளமைய மேற்பார்வையாளர் லட்சுமி நரசிம்மன், ஒருங்கிணைப்பாளர் செந்தில் ராஜா, ஆசிரியர்கள் பாபுராவ், நந்தீஸ்வரி, ரமேஷ் வாழ்த்துரை வழங்கினர். ஊர்வலத்தில், வரும் 23ம் தேதி கூட்டேரிப்பட்டு ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியில் நடக்கும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் குறித்த துண்டறிக்கைகள் பொது மக்களுக்கு வழங்கப்பட்டது.