தேசிய நெடுஞ்சாலையில் விபத்து: 10 பேர் காயம்

64பார்த்தது
விழுப்புரம் அடுத்த வீடூர் தேசிய நெடுஞ்சாலையில் முன்னாள் சென்ற லாரி மீது ஆம்னி பேருந்து மோதியதில் ஆம்னி பேருந்தில் பயணம் செய்த இரண்டு பெண்கள் உள்ளிட்ட 10 பேர் காயமடைந்தனர்.


விழுப்புரம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் விக்கிரவாண்டி அடுத்த வீடூர் பகுதியில் திருச்சியில் இருந்து சென்னை நோக்கி சென்று கொண்டிருந்த ஆம்னி பேருந்து நாகர்கோவிலில் இருந்து சென்னைக்கு பிளாஸ்டிக் மூலப்பொருட்களை ஏற்றி சென்ற லாரியின் பின்புறம் பலமாக மோதி கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் புகுந்தது,  


இந்த விபத்தில் ஆம்னி பேருந்தில் பயணம் செய்த இரண்டு பெண்கள் உள்ளிட்ட பத்து நபர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டது, இதனை தொடர்ந்து சம்பவம் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த விக்கிரவாண்டி போலீசார் காயம் அடைந்த நபர்களை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர், மேலும் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில் ஆம்னி பேருந்தை ஓட்டி வந்த ஓட்டுநர் தூக்க கலக்கத்தில் முன்னாள் சென்ற லாரி மீது மோதியதே விபத்துக்கான காரணம் என தெரிய வந்துள்ளது.

தொடர்புடைய செய்தி