தாலுகா ஆபீசில் தீக்குளித்தவர் சாவு

52பார்த்தது
தாலுகா ஆபீசில் தீக்குளித்தவர் சாவு
விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனுார் அடுத்த கெங்கபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் வரதன் மகன் மோகன்ராஜ், 33; இவர், நேற்று முன்தினம்(செப்.27) மதியம் 1: 00 மணியளவில், தாலுகா அலுவலகத்தில் தனது நிலத்தை 23 பேர் அபகரிக்க முயல்வதாக கூறி உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.

உடன் அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு, திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் சென்னை, கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றவர் நேற்று(செப்.28) காலை 11: 00 மணியளவில் இறந்தார்.

வளத்தி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். மோகன்ராஜ் இறப்புக்கு காரணமான 23 பேர் மீது வழக்குப் பதிந்து கைது செய்ய வலியுறுத்தி அவரது உறவினர்கள் நேற்று மாலை 5: 00 மணிக்கு வளத்தி காவல் நிலையம் எதிரே சேத்பட் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி, 5: 15 மணிக்கு மறியலை கைவிடச் செய்தனர். காவல் நிலையத்தில் கிராம மக்கள், பா. ம. க. , நிர்வாகிகள் அதிகளவில் திரண்டதால் பரபரப்பு நிலவியது.

தொடர்புடைய செய்தி