நாலாயிர திவ்ய பிரபந்தம் முற்றோதல் நிகழ்ச்சி தொடக்கம்

51பார்த்தது
நாலாயிர திவ்ய பிரபந்தம் முற்றோதல் நிகழ்ச்சி தொடக்கம்
செஞ்சி கோட்டையில் உள்ள வெங்கட்ரமணர் கோவிலில் நாலாயிர திவ்ய பிரபந்தம் முற்றோதல் நிகழ்ச்சி 10 நாட்கள் நடைபெறுகிறது. இதன் தொடக்க விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. இதையொட்டி காலையில் ஸ்ரீதேவி பூதேவி சமேத வெங்கட்ரமணருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் செய்யப்பட்டது. தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் வெங் கட்ரமணர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

அதனைத்தொடர்ந்து பஜனை மண்டபத்தில் குடியிருந்த பாகவதர்களுக்கு இடையே நாலாயிர திவ்ய பிரபந்தம் முற் றோதல் நிகழ்ச்சியை செஞ்சி ஸ்ரீரங்க பூபதி கல்வி நிறுவன தாளாளரும், வக்கீலுமான ரங்கபூபதி தொடங்கி வைத்தார். இதில் கல்வி நிறுவன இயக்குனர் சாந்தி பூபதி, வக்கீல் வைகை, தமிழ்ச்செல்வன், சுதர்சன பாகவதர் உள்பட பக்தர் கள் பலர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி