குறுவட்ட விளையாட்டு போட்டிகள் அமைச்சர் துவக்கி வைப்பு

61பார்த்தது
குறுவட்ட விளையாட்டு போட்டிகள் அமைச்சர் துவக்கி வைப்பு
செஞ்சி, மேல்மலையனுார் குறுவட்ட மையங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கான தடகள விளையாட்டுப் போட்டிகள் நடந்தது. நாட்டார்மங்கலம் ராஜா தேசிங்கு பாலிடெக்னிக் கல்லுாரியில் நேற்று நடந்த போட்டிக்கு, ஒன்றிய சேர்மன் அமுதா ரவிக்குமார் தலைமை தாங்கினார். கல்லுாரி முதல்வர் கார்த்திகேயன் முன்னிலை வகித்தார். குறுவட்ட மைய செயலாளர் திருமலை வரவேற்றார். அமைச்சர் மஸ்தான் ஒலிம்பிக் ஜோதியை ஏற்றி, போட்டிகளை துவக்கி வைத்தார். 400க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 1000க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். மாலை, வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு ஒன்றிய சேர்மன் அமுதா ரவிக்குமார் சான்றிதழ் வழங்கினார். தி. மு. க. , மாவட்ட செயலாளர் சேகர், மாவட்ட கவுன்சிலர் அன்பு செழியன், அமைப்பு சாரா தொழிலாளர் அணி அமைப்பாளர் தமிழரசன், ஒன்றிய கவுன்சிலர் கலைச்செல்வி, உடற்கல்வி ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி