ஃபான்சூன் இந்தியா வெளியிட்டுள்ள 2024ஆம் ஆண்டுக்கான அதிகளவில் வரி செலுத்தியவர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது. பட்டியலில் முதலிடத்தில் 92 கோடி ரூபாய் அரசுக்கு வரியாக செலுத்தி ஷாருக்கான் உள்ளார். ரூ.80 கோடி வரி செலுத்தி நடிகர் விஜய் இரண்டாம் இடத்தில் உள்ளார். 75 கோடி செலுத்தி சல்மான் கான் 3ஆம் இடத்திலும், 71 கோடி வரி செலுத்தி அமிதாப் பச்சன் 4ஆம் இடத்திலும் உள்ளனர். 66 கோடி வரி செலுத்தி விராட் கோலி 5ஆம் இடத்தில் உள்ளார்.