அனந்தபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 53 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய அறிவியல் ஆய்வக கட்டடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது. அனந்தபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 6வது நிதி குழு மானிய திட்டத்தில் 53 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய அறிவியல் ஆய்வகம் மற்றும் நுாலகம் கட்டுவதற்கான பூமி பூஜை நடந்தது. பேரூராட்சி சேர்மன் முருகன் தலைமை தாங்கினார். செஞ்சி ஒன்றிய சேர்மன் விஜயகுமார் முன்னிலை வகித்தார். செயல் அலுவலர் மலர் வரவேற்றார்.
அமைச்சர் மஸ்தான் பூமி பூஜை செய்து, அடிக்கல் நாட்டி பணிகளைத் துவக்கி வைத்தார். தொடர்ந்து திறனறி தேர்வில் வெற்றி பெற்ற 11ம் வகுப்பு மாணவி நிர்மலா தேவிக்கு சான்றிதழும், நினைவு பரிசும் வழங்கினார்.
ஒன்றிய துணைச் சேர்மன் ஜெயபாலன், மாவட்ட கவுன்சிலர் ஏழுமலை, அனந்தபுரம் நகர செயலாளர் சம்பத், பேரூராட்சி துணைத் தலைவர் அமுதா, நகர பொருளாளர் பாபு, மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் பிரசன்னா, பள்ளி தலைமை ஆசிரியர் ஆனந்தன் உட்பட பலர் பங்கேற்றனர்.