மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு நாள் விழாவில் பங்கேற்க தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்க்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கோயம்பேட்டில் உள்ள விஜயகாந்த் நினைவிடத்தில் நாளை (டிச.28) முதலாம் ஆண்டு நினைவு நாள் விழா நடைபெற உள்ளது. அந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ள தவெக தலைவர் விஜயை நேரில் சந்தித்து தேமுதிக துணைச் செயலாளர் எல்.கே.சதீஷ், மற்றும் விஜய பிரபாகர் அழைப்பு விடுத்தனர்.