தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அடுத்த எட்டியம்பட்டி பகுதியில் இருந்து மேல்மருவத்தூர் ஓம் சக்தி கோவிலுக்கு சுமார் 50 பெண்கள் பேருந்தில் சென்றுகொண்டிருந்தனர். அப்போது கிருஷ்ணகிரி திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையில் பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்தில் உள்ள 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் ஓட்டுனர் உட்பட 40 பேர் படுகாயம்அடைந்துள்ளனர். அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், இதுகுறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.