ரயில் சக்கரங்களுக்கு இடையில் ஒளிந்து கொண்டு பயணம் செய்த இளைஞர்

58பார்த்தது
ம.பி: டிக்கெட் எடுக்க பணம் இல்லாததால் சுமார் 290 கி.மீ. தூரம் ரயிலின் சக்கரங்களுக்கு இடையில் ஒளிந்து கொண்டு இளைஞர் ஒருவர் பயணம் செய்த வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜபல்பூர் ரயில் நிலையத்தில் நின்ற டானாபூர் எக்ஸ்பிரஸ் ரயிலை ரயில்வே அதிகாரிகள் சோதனை செய்த போது S-4 கோச்சின் கீழ் ஒரு இளைஞன் படுத்திருப்பதை கவனித்துள்ளனர். இதையடுத்து, வெளியே வந்த இளைஞர் இடார்சி முதல் ஜபல்பூர் வரை ரயில் சக்கரங்களுக்கு இடையில் ஒளிந்து கொண்டு பயணம் செய்ததாக கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி