கிரெடிட் ஸ்கோர் என்பது ரிசர்வ் வங்கியின் அங்கீகரிக்கப்பட்ட கிரெடிட் அமைப்புகள் வழங்கும் 3 இலக்க மதிப்பெண் ஆகும். 300 - 900 வரை இதன் மதிப்பு இருக்கும். செலவுப் பழக்கம், கிரெடிட் கார்டுகள் மற்றும் கடன் வரலாற்றை இது பிரதிபலிக்கும். உங்களுக்கு குறைந்த கிரெடிட் ஸ்கோர் இருந்தால் ஒழுங்காக கடன் கட்டுபவராக இல்லை மற்றும் முந்தைய கடன்களை திருப்பிச் செலுத்தாதவர் என்பதை குறிக்கிறது. குறைவான கிரெடிட் ஸ்கோருடன் இருப்பவர்களுக்கு கடன் பெறுவதற்கான வாய்ப்பு மிகக் குறைவு.