மறைந்த முன்னாள் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் உடலுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், "தமிழ்நாடு சார்பில் எந்த கோரிக்கை வைத்தாலும் மன்மோகன் சிங் தலைமையிலான அரசு அதை கனிவுடன் பரிசீரித்து அனுமதி வழங்கி வந்தது. சென்னைக்கு மெட்ரோ ரெயில் சேவையை கொண்டு வர காரணமானவர் மன்மோகன் சிங்" என கூறியுள்ளார்.