நாடாளுமன்றம் அருகே தீக்குளித்த 26 வயது இளைஞர் உயிரிழந்தார். கடந்த 25ம் தேதி நாடாளுமன்ற கட்டிடம் அருகே வந்த இளைஞர் தான் வைத்திருந்த பெட்ரோலை உடலில் ஊற்றி தீக்குளித்தார். இதையடுத்து, 95% தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இளைஞர் இன்று (டிச.27) அதிகாலை 3 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். முதற்கட்ட விசாரணையில், குடும்பத் தகராறு காரணமாக, அவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.