மெக்சிகோவை பூர்வீகமாக கொண்ட நடிகையும் பாடகியுமான செலீனா கோமஸ் தனது இன்ஸ்டாகிராம் பதிவில் கதறி அழுதார். சமீபத்தில் பதவியேற்ற டொனால்ட் டிரம்பின் அரசு அமெரிக்காவில் உள்ள சட்டவிரோத குடியேறிகளை நாட்டை விட்டு வெளியேற்றுவது குறித்து செலினா கோமஸ் தனது விரக்தியை பதிவு செய்தார். அமெரிக்காவை விட்டு ஆவணங்களற்ற மெக்சிகோ மக்கள் வெளியேற்றப்படுவதாகவும், எனது மக்கள் தாக்கப்படுகிறார்கள் எனக்கு என்ன செய்வது என தெரியவில்லை என கூறி கதறி அழுதார்.