AI தொழில்நுட்பத்தை வைத்து DeepSeek என்ற செயலியை சீனா உருவாக்கியுள்ளது. இந்த செயலி சீனாவிற்கு ஆதரவாக செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த செயலியிடம், 'அருணாச்சலப் பிரதேசம் ஒரு இந்திய மாநிலம், மற்றும் இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களை பெயரிடுங்கள்' போன்ற கேள்விகளை ஒருவர் எழுப்பியுள்ளார். அதற்கு, மன்னிக்கவும். அது எனது தற்போதைய எல்லைக்கு அப்பாற்பட்டது என DeepSeek செயலி பதிலளித்துள்ளது.