பிப்ரவரி 01 ஆம் தேதி அறிமுகப்படுத்தப்படும் மத்திய பட்ஜெட் 2025 இல், EMI மூலம் தங்க நகைகளை வாங்குவதற்கான அறிவிப்பை வெளியிடுமாறு, நாட்டில் உள்ள தங்க நகை வணிகங்கள் மற்றும் டீலர்கள் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனைக் கேட்டுக் கொண்டுள்ளனர். மேலும், தங்க ஆபரணங்களைத் தயாரிக்கும் கைவினைஞர்களின் திறமையை அதிகரிக்கவும், அதற்கான நிதியை ஒதுக்கவும் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும் அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.