அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில், சென்னை காவல் ஆணையர் மீதான உயர் நீதிமன்றத்தின் கருத்துகளுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. FIR வெளியான விவகாரத்தில் காவல்துறை மீது தவறு இல்லை என்பதால் உயர் நீதிமன்றத்தின் கருத்துகளை நீக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு முறையீடு செய்திருந்தது. இந்நிலையில், காவல் ஆணையர் அருண் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.