ஆந்திரா: ராஜமுந்திரியை சேர்ந்த பெனுமல்ல ரம்யா ஸ்ம்ருதி (35) என்ற சற்று மனநலம் பாதிக்கப்பட்ட பெண் அண்மையில் பட்டன் செல்போனை வாயில் போட்டு விழுங்கினார். மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ரம்யாவுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு செல்போன் வெளியில் அகற்றப்பட்டது. இருந்தபோதிலும் அவரின் இதயம் திடீரென செயலிழந்தது. தொடர்ந்து அவரை காப்பாற்ற பெரும் முயற்சியை மருத்துவர்கள் எடுத்தபோதும் அது பலனளிக்கவில்லை.