மயிலாடுதுறை: சீர்காழி தாலுகா திருமுல்லைவாசல் கிராமத்தில் 15 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) சோதனை இன்று (ஜன. 28) அதிகாலை 3 மணி முதல் நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதேபோல் சென்னையில் 5 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனையில் இறங்கியுள்ளனர். இதன் காரணமாக ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சோதனை எதற்காக என்பது பற்றிய தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.