அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 7 நாள் போலீஸ் காவல் முடிந்து ஞானசேகரனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த இருந்த நிலையில் அவருக்கு திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், ஞானசேகரன் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் உள்ள கைதிகள் வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த வாரமும் அவர் ஹாஸ்பிட்டலில் அனுமதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.