அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் பாதிக்கப்பட்ட மாணவிக்கு இடைக்கால இழப்பீடாக ரூ.25 லட்சம் வழங்க வேண்டும் என அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்தத் தொகையை எஃப்ஐஆர் கசிய காரணமாக இருந்தவர்களிடம் இருந்து பெற்று வழங்குமாறு நீதிமன்றம் அறுவுறுத்தியுள்ளது. எஃப்ஐஆர் கசிந்த சம்பவத்தில் காவல்துறை மீது தவறு இல்லை என தமிழக அரசு முறையீடு செய்த மனுவை விசாரித்த நீதிபதிகள், சென்னை காவல் ஆணையர் மீதான மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தின் கருத்துகளுக்குத் தடை விதித்தனர்.