
வேலூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம்
வேலூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம், வரும் ஏப்ரல் 25ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள 5ஆவது மாடியில் நடைபெற உள்ளது. இதில், கடந்த மாதத்தில் விவசாயிகளிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க உள்ளன. எனவே, வேலூர் மாவட்ட விவசாயிகள் அனைவரும் பங்கேற்று பொது பிரச்னைகளை கோரிக்கை மூலமாகவும், தனி நபர் பிரச்னைகளை மனுக்கள் மூலமாகவும் தெரிவிக்கலாம்.