வேலூர்: கள்ளச்சந்தையில் மது விற்பனை - வாலிபர் கைது

80பார்த்தது
வேலூர்: கள்ளச்சந்தையில் மது விற்பனை - வாலிபர் கைது
வேலூர் லாங்கு பஜாரில் கள்ளச்சந்தையில் மது விற்பனை செய்வதாக மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையில் போலீசார் அந்தப் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது ஒரு துணிக்கடையின் அருகே பதுக்கி வைத்து மது விற்பனை செய்து கொண்டிருந்த வேலூர் கொசப்பேட்டை பகுதியைச் சேர்ந்த வினோத்குமாரை (36) போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி